நீர் ஜீவ அப்பம் பஞ்சத்தில்
neer jeeva appam panjathil
1. நீர் ஜீவ அப்பம் பஞ்சத்தில் உம்மால் என் பசி ஆறும் நான் போம் வனாந்தரங்களில் என் உள்ளம் உம்மை நாடும் பிதாவின் ரூடவ்வாம் மன்னாவே நீர் என்னைப் பாவ இச்சைக்கே விலக்கிக் காத்துக் கொள்ளும்.
2. நீர் ஜீவ ஊற்று உம்மாலே என் ஆத்ம தாகம் தீரும் நீர் தரும் ரூடவ்வு நித்தமே சுரக்கும் தண்ணீராகும் நீரூ ஆற்றாய் என்னில் ஊறுமே நிறைவாய் நித்தம் தாருமே ஆரோக்கியமும் சீரூயம்.
3. என் மேய்ப்பராய் இருக்கிறீர் என் மேய்ச்சலும் நீர் தாமே காணாமல்போன என்னை நீர் அன்பாக மீட்போராமே இவ்வேழை ஆட்டை என்றைக்கும் நீர் பாதுகாத்துப் போஷியும் நான் உம்முடையோனாமே.
4. நீரே நான் என்றும் வாஞ்சிக்கும் மா நேசமுள்ள நாதர் நீரே என் ஆசாரியரும் பலியுமான கர்த்தர் நீர் என்னை ஆளும் ராஜாவும் உம்மாலே எந்தப் போரிலும் ஜெயிப்பேன் மா சமர்த்தர்.