நீர் என்னோடும் நான் உம்மோடும்
neer ennodum naan ummodum
நீர் என்னோடும் நான் உம்மோடும் வாழ்ந்திடவே நான் வாஞ்சிக்கிறேன் நீர் இல்லையேல் நான் இல்லையே என் வாழ்வில் இந்த மீட்பில்லையே
காரிருள் என்னை சூழ்ந்ததே காத்தீரே உம் கிருபையால் கன்மலையின் மேல் கால் நிறுத்தி கனிவாய் என்னையும் நடத்தினீரே
பாதை விலகின ஆட்டைப் போல இந்த பாரினில் அலைந்த நேரம் நல்ல மேய்ப்பனாய் தேடி வந்தீரே நல்லவரே நன்றி சொல்லிடுவேன்
சோதனைகள் என் வாழ்விலே சோர்ந்திடாமல் வந்த நேரம் சோதனையிலும் துணையானீரே சோர்ந்திடாமல் ஜெயம் பெறவே