நீர் என் கன்மலை
neer en kanmalai
நீர் என் கன்மலை நீர் என் இரட்சகர் நீர் என் நம்பிக்கை நீர் என் நங்கூரம் -2
நீரே என் கன்மலை நீரே என் அடைக்கலம் நீரே என் மறைவிடம் நீரே என் கேடகம்
ஆராதிப்பேன் நான் ஆராதிப்பேன் முழு உள்ளதோடு ஆராதிப்பேன் துதித்திடுவேன் உம்மை புகழ்ந்திடுவேன் துதிக்கு பாத்திரர் நீர் மாத்ரமே -2
1. புயல் காற்று என்னை நோக்கி வீசிட்டாலும் சூழல் காற்று சுற்றி சுற்றி அடித்தாலும் பெருமழை என்மேல் பொழிந்தாலும் பெரும் வெள்ளம் என் மேல் மோதினாலும்
கன்மலை மேல் நான் நின்றிடுவேன் அசைவுறாமல் நான் உறுதியாவேன் - 2
2. வனாந்திர வாழ்க்கை என் முன் நின்றாலும் வறட்சியின் கொடுமை சுற்றி சூழ்ந்தாலும் பாலும் தேனும் ஓடுகின்ற தேசத்தை நோக்கி பாதை காட்டும் நேசரின் பின் செல்வேன்
உம்மை நம்பி நான் வீழ்ந்ததில்லை வெட்கப்பட்டு நான் போவதில்லை -2