நீங்கதானே இயேசுவே
neengadhaanae yesuvae
நீங்கதானே இயேசுவே நிலையான சொந்தம் உம்மையன்றி உலகில் எனக்கேது தஞ்சம் --(2)
உம் அருள் உள்ளம் எனக்கு தஞ்சம் உம்மை என்றும் பிரியாத ஏழையின் நெஞ்சம் --(2) நீரே சொந்தம் நீரே தஞ்சம் --(2) நீரே செல்வம் வாழ்வின் மையம் --(2)
கொடியோடு இணைந்துள்ள கிளை போலவே உன்னோடு ஒன்றாகும் அருள் வேண்டுமே --(2) கனி தந்து என் வாழ்வில் செழிப்பாகுவே --(2) வருவாய் என் இறைவா என் உயிர் மூச்சிலே--(2)
நிலை வாழ்வு தருகின்ற வார்த்தைகளோ இறை மைந்தன் உம்மிடமே இருக்கின்றதோ --(2) நான் எங்கு போவது உம்மைப் பிரிந்து --(2) வாழ்வெல்லாம் வருவேனே உம்மை தொடர்ந்து--(2)