நீங்கதான் இயேசப்பா எங்களுக்குப் போதும்
neengadhaan iyesappaa engalukkup podhum
நீங்கதான் இயேசப்பா எங்களுக்குப் போதும் உங்க மகிமை எங்களை மூடும் உங்க கிருபை உங்க இரக்கம் உங்க தயவு எங்களுக்குப் போதும் போதும், போதும், போதும், போதும்
(எங்க வீட்டை மூடும், எங்க சபையை மூடும் எங்க தெரு மூடும், எங்க தேசத்தை மூடும்)
1. தாய் மறந்தாலும், நான் மறவேனே என்று சொன்னீரே எனதேசுவே இரக்கம் நிறைந்த எங்கள் தாயே உந்தன் சேய் என்னை நீர் மறவீரே
2. உமது வாக்குகளில் உண்மையுள்ளவரே ஒரு வார்த்தையும் தரையில் விழவில்லை விழவிடவில்லையே வாக்குச் செய்ததை நிறைவேற்ற வல்லவர் வழுவாது காக்கும் தூயாதி தூயவர்
3. என் வாழ்க்கைப் படகிலே வாழுகின்ற இயேசுவே எதிர்ப்படும் புயலை எல்லாம் அடக்கிடுவி காற்றையும் தட்டி, கடலையும் அமர்த்தி ஜெயமாய் வாழ கற்று தந்தீரே