நீங்காத என் நேசரே உம் நாமம் இன்பமே
neengaadha en nesarae um naamam inbamae
நீங்காத என் நேசரே உம் நாமம் இன்பமே என்றென்றும் பாடி மகிழ்ந்து எந்நாளும் ஸ்தோத்திரிப்பேன்
பெருவெள்ளம் மதிலை மோதுகையில் பெருங்காற்றிலிருந்து பேசினீரே எலியாவின் தேவனே என் தேவன் எந்நாளும் உம்மை பின்ற்றுவேன்
துனபங்கள் துயரங்கள் சூழ்ந்த வேளை தூய நல் ஆவியால் தேற்றினீரே ஆவியின் வரங்கள் தந்தீரே அல்லேலூயா என்று பாடிடுவேன்
ஆத்தும நேசரே உம் சாயலாய் ஆவியில் என்றும் நான் வளர ஆவியின் கனிகள் நிறைவாக அன்பரே என்றும் தந்திடுமே