நீங்க செய்த நன்மைகளை
neenga seydha nanmaigalai
நீங்க செய்த நன்மைகளை மறக்கமுடியுமா அத்தனையும் சொல்ல என் நாவு போதுமா - 2
ஒன்றா இரண்டா நீர் எனக்கு செய்தது எண்ண முடியுமா அது எண்ணில் அடங்காதது - 2
1. சோதனையின் நேரத்திலே துணையாக வந்தீரே சோதனையில் ஜெயம்கொடுத்து இதுவரையில் நடத்தினீரே - 2 - ஒன்றா
2. ஆபத்து காலத்திலே அனுகூலமானீரே கலங்கி அழும் நேரத்திலே ஆறுதல் தந்தீரே - 2 - ஒன்றா
3. மனிதர்கள் விலகினாலும் உறவுகள் வெறுத்தாலும் என்னை மறவாமல் உள்ளங்கையில் வரைந்தீரே - 2 - ஒன்றா