நீங்க நினைக்காம ஒன்றும்
neenga ninaikkaama ondrum
நீங்க நினைக்காம ஒன்றும் வாழ்வில் நடக்காது நீங்க குறிக்காம என்னால் வாழ முடியாது -2
1. எளியவன் என்னை குப்பையில் எடுத்து பிரபு களோடு அமரச் செய்தீர் -2 நான் இனி தரித்திரன் ஆவதில்லை ஆசீர்வாதம் என்றும் குறைவதில்லை -2 (ஆசீர்வாதம் என்றும் குறைவதில்லை)
2. என் தலையை எண்ணெயால் அபிஷேகித்து பாத்திரம் நிரம்பி வழிய செய்தீர் -2 சந்தோஷ வாழ்வை எனக்கு தந்து இதுவரை என்னை நடத்திவந்தீர் -2 ( இதுவரை என்னை நடத்திவந்தீர்)
3. வியாதியின் நேரத்தில் பலனைத்தந்து ஆயுசு நாட்களை பெருகச் செய்தீர்-2 வாலாக்காமல் என்னை தலையாக்கினீர் கீழாகாமல் என்னை மேல் ஆக்கினீர் -2 (கீழாகாமல் என்னை மேல் ஆக்கினீர்)