நீங்க மட்டும் போதும்
neenga mattum podhum
நீங்க மட்டும் போதும் - 3 என் வாழ்க்கை மாறும் நீங்க மட்டும் போதும் - 3 சூழ்நிலை மாறும்
உம்மை ஆராதித்திடுவேன் என் ஆயுள் நாளெல்லாம் உம்மைப்போல வாழுவேன் உயிருள்ள நாளெல்லாம்
1. கன்னங்களில் வடிந்துவந்த கண்ணீரையும் கண்டீரே பயப்படாதே என்று வாக்குத்தத்தம் தந்தீரே தாகமெல்லாம் தீர்த்தீரே இயேசையா புது வாழ்க்கையும் தந்தீரே இயேசையா
2. இருதயம் நொறுங்கி கிடந்த என்னையும் கண்டீரே தரிசனம் தந்து புது தைரியத்தை தந்தீரே வேதனைகள் நீக்கினீரே இயேசையா புது மேன்மையும் தந்தீரே இயேசையா
3. ஒதுக்கி வைக்கப்பட்ட என்னையும் கண்டீரே அபிஷேகம் செய்து அரியணையில் வைத்தீரே கூடவே இருந்தீரே இயேசையா என்னை நிறைவாய் நடத்தினீரே இயேசையா