நீங்க இல்லாத வாழ்வும்
neenga illaadha vaazhvum
நீங்க இல்லாத வாழ்வும் ஓர் வாழ்வாகுமா உம்மை தேடாத நாளும் ஓர் நாளாகுமா - (2)
இயேசையா இயேசையா உம் பிள்ளை நான்ஐயா -(2)
உம்மோடு நடந்தால் ஆனந்தம் உம்மோடு இருந்தால் பேரின்பம் - (2) நன்மையினால் என் வாயை நிரப்பும் நல்லவரே என் இயேசையா - (2)
உம் வசனம் எனக்கு ஆனந்தம் உம் சமூகம் எனக்கு பேரின்பம் -(2) வார்த்தையினால் என் வாழ்வை வளமாக்கும் வல்லவரே என் இயேசையா - (2)
உம் சத்தம் எனக்கு ஆனந்தம் உம் சித்தம் எனக்கு பேரின்பம் -(2) சித்தம் செய்து சீயோனில் சேர சுத்தம் செய்யும் என் இயேசையா - (2)