நீதியும் தேவ ஜோதியும்
needhiyum deva jodhiyum
1. நீதியும் தேவ ஜோதியும் வேதம் விளங்கும் புரமே தேவனும் தேவ ஆட்டுக்குட்டியும் தேவ தாசரோடிலங்குகிறார்
என்னவோ! சீயோனின் மகிமை - நின்று என்றென்றும் வீசிடுதே எண்ணியே அதன் வாஞ்சையின் மண்ணில் மறைகின்றார் நேயவரே
2. புவியியல் இயேசு போலவே ஆவியில் பிதாவின் முகம் மேவியே கண்டார் சீயோன் தனிலே சேவிப்பார் அவரை கண்டுமே - என்ன
3. ஏகனாய் இக லோகத்தில் ஏதுமற்றே சேவை புரிந்தோர் ஏகமாய் தேவ தாசருடனே வேகம் பெறுவார் தம் சுதந்திரமே - என்ன
4. யாரிவர் இதோ சீயோனில் யாரும் கற்றிராத கீதமே ஆற்றுவோர் பல பாடுயேற்றவர் சாற்றுவார் தனை கீதமதுவாய் - என்ன
5. என்று சேருவேன் சீயோனில் அன்று கூடவே மகுடமே நின்று தேவனின் மா மகிமையாய் தோன்றுவேன் முடிவிலா யுகமாய் - என்ன