நீதிமான்கள் கூடாரங்களில்
needhimaangal koodaarangalil
1. நீதிமான்கள் கூடாரங்களில் ராஜாவின் ஜெய தொனி கெம்பீரத்தோடே முழங்கிடுதே ஜெயித்தார் ஜீவியமே
நாம் பின் செல்லுவோம் இயேசுவை பின்பற்றுவோம் நம் சேனையதிபன் இயேசு யேகோவா நிசியே
2. எல்லாவிடத்தும் வெற்றி யெந்நாளும் ஏசுவின் சிறக்க நீதியின் ஜெய பாதையிலே என் தீபமாய் நடத்துவார் - நாம்
3. இன்னல் இடர்கள் இப்பூவிலுண்டே என்னை பின் செல்வோருக்கு” என்றவரே இப்பாரிதை முற்றும் வென்றார் ஜெயம் நமக்கே - நாம்
4. வீரராய் ஜெய ஜிவியம் பெற சீராய் போர் செய்தவர் மாறாத ஜீவ ஆற்றில் அருந்தி தேறியோராய்த் திகழ்வார் - நாம்
5. நித்தம் நிலைக்கும் புத்திரன் போல் இத்தரை ஆண் மகவாய் சிங்காசனம் சேர்ந்துட்டாரே சிந்தையில் ஜெயம் பெற்றோர் - நாம்
6. சீயோன் உனக்கே ஜெயம் எந்நாளும் தீயோர் உன்னில் இல்லையே சேவித்து உன்னை நேசித்து வென்றோர் நின்றாளுகை செய்குவார் - நாம்