நீதானே இறைவா
needhaanae iraivaa
நீதானே இறைவா நிலையான சொந்தம் உனையன்றி உலகில் எனக்கேது பந்தம் (2) உன்னருள் ஒன்றே எனக்குத் தஞ்சம் உனை என்றும் பிரியாது ஏழை என் நெஞ்சம் - 2 நீயே சொந்தம் நீயே தஞ்சம் நீயே செல்வம் வாழ்வின் மையம் -2
1. கொடியோடு இணைந்துள்ள கிளை போலவே உன்னோடு ஒன்றாகும் அருள் வேண்டுமே (2) கனி தந்து என் வாழ்வு செழிப்பாகவே - 2 வருவாயே தலைவா என் உயிர் மூச்சிலே - 2
2. நிலைவாழ்வு தருகின்ற வார்த்தைகளோ இறைமைந்தன் உன்னிடமே இருக்கின்றன (2) நானெங்கு போவது உனைப் பிரிந்து - 2 நாளெல்லாம் வருவேன் உனைத் தொடர்ந்து - 2