நீதானே என் சொந்தமே நீங்காத என் பந்தமே
needhaanae en sondhamae neengaadha en pandhamae
நீதானே என் சொந்தமே நீங்காத என் பந்தமே தூங்காது என் கண்களே துணையாக நீ இல்லையேல் என் உயிரானவா என் உணவாகவா மகிழ்வாக என் வாழ்வை தினம் காக்கவா என் உடன் வாழ வா என் துயர் போக்க வா உன் நெஞ்சோடு எனை சேர்த்து தாலாட்ட வா
உறவாடி களிகூர்ந்த என் சொந்தங்கள் சுமைவந்த போதெல்லாம் பரந்தோடினர்
நலமான பொழுதெந்தன் உடன் வாழ்ந்தவர் தடுமாற்றம் கண்டென்னை தனியாக்கினர் உன் தோள்களில் எனைத் தாங்கினாய் என் நெஞ்சத்தின் வலிபோக்கினாய் தாயாக எனை என்றும் நீ தேற்றினாய்
சோகங்கள் என் வாழ்வில் தினம் குழ்கையில் நம்பிக்கை தீபங்கள் நீ ஏற்றினாயள் இனி வாழ்ந்து பயனில்லை என எண்ணினே . புவி வாழ்வில் பொருள் தந்து பயனூட்டினாய் என் பாதையின் இருள் போக்கினாய் என் வாழ்க்கையில் புதிர் நீக்கினாய் . தாயாக எனை என்றும் நீ தேற்றினாய்