நீ உயிரோடு இருக்கும்
nee uyirodu irukkum
நீ உயிரோடு இருக்கும் நாளெல்லாம் ஒருவரும் உன்னை எதிர்ப்பதில்லை நான் மோசேயோடே இருந்ததுபோல உன்னோடு இருப்பேன் என் மகனே (மகளே)
திகையாதே, கலங்காதே நீ போகும் இடமெல்லாம் வருவேன் - (2)
1. தாய் தன் சேயை மறந்துபோனாலும் நான் உன்னை மறப்பதில்லை துன்பத்தால் பாரத்தால் நசுங்குண்டு போகையில் அடைக்கலமாய் இருப்பேன் - (2)
2. உன் ஜெபத்தை தள்ளாமல் கிருபையை விலக்காமல் நான் உன்னை தாங்கிடுவேன் தீயையும் தண்ணீரையும் கடந்து வரும்போது நான் உன்னை ஏந்திடுவேன் - (2)