நீ உயிரைப் பெற நான் இரத்தம் சிந்தினேன்
nee uyiraip pera naan iratham sindhinen
1. நீ உயிரைப் பெற நான் இரத்தம் சிந்தினேன் நீ மீட்பை அடைய நான் விலையாகினேன் என் ஜீவன் நான் தந்தேன் தந்தேன் நீ என்னத்தைத் தந்தாய்?
2. சதாகால இன்பம் நீ பெற்று வாழ்ந்தி;ட இவ்வுலகின் துன்பம் வந்தேன் சகித்திட அநேகாண்டாய் பட்டேன் பட்டேன் ஓர் நாள் நீ தந்தாயா?
3. மகத்வ நிலைமை உனக்காய் நான் விட்டேன் உலகின் வாதையை உனக்காய்ச் சகித்தேன் தந்தேனே நான் என்னை என்னை நீ என்னத்தைத் தந்தாய்?
4. உன் ஜீவன் தத்தம் செய் உன் நேச மீட்பர்க்காய்; பூலோக வாழ்வு பொய் ஜீவி நித்யத்திற்காய் குப்பை உலகெல்லாம் அவரைப் பின் செல்லு.