நீ செய்த நன்மை
nee seydha nanmai
நீ செய்த நன்மை நினைக்கின்றேன் - என் நெஞ்சுருக நன்றி சொல்கின்றேன் இறைவா - 4 ( 2 )
உண்டிட உணவும் உடையுமே கொடுத்து ஒரு குறையின்றிக் காத்து வந்தாய் ( 2 ) - ஓர் அன்னையைப் போலவே அன்பினைப் பொழிந்து அல்லல்கள் யாவையும் தீர்த்து வைத்தாய் - 2
மலருக்குப் பதிலாய் களையெங்கும் தோன்றி மனதினை நிரப்புதல் பார்த்திருந்தாய் ( 2 ) - உடன் உலரட்டும் என்றே ஒதுக்கிவிடாமல் களைகளை அகற்றிக் காத்திருந்தாய் - 2