நீ செஞ்ச நன்மையெல்லாம்
nee senja nanmaiyellaam
நீ செஞ்ச நன்மையெல்லாம் உலகோர்க்கு சொல்லிடுவேன் நீகண்ட கனவெல்லாம் நனவாக நானுழைப்பேன் - இயேசுவே உன் நினைவாக எங்காளும்வாழுவேன்
ஏழையென்னு வெறுக்கவில்லை பாவியென்னு ஒதுக்கவில்லை பொண்ணுன்னு மிதிக்கவில்லை தாழ்ந்தவன்னு பிரிக்கவில்லை உன் மனசாஎம் மனசு மாறணும் உன் வாழ்வா என் வாழ்வு மாறணும் இயேசுவே இயேசுவே - அதனால உங்கனவு பலிக்கணும்
துன்பம் கண்டு துடிதுடிச்சேன் இன்பம் கண்டு மகிழ்ந்து நிண்ணேன் பசி கண்டு பரிதவிச்சேன் தாகம் கண்டு தவிச்சு நிந்தேன் உன்னப்போல நானும் இன்று ஆகணும் அதனால் நான் பிறர் துன்பம் ஏற்கணும் இயேசுவே இயேசுவே - அதனால உங்கனவு பலிக்கணும்