நவ எருசலேம் மணவாளன்
nava erusalem manavaalan
நவ எருசலேம் மணவாளன் நடு வானில் தோன்றிடுவான் இதுவரை இருந்த துன்பமில்லை எமக்கென்றுமே ஆனந்தம்
1. தள கீர்த்தனம் இயேசு நின்று பலன் ஈந்திடு வார் அன்று அவன் ஆவியினால் புதுப் பெலனடைந்து ஜெய வீரராய் நின்றிடுவோம் - நவ.
2. நிதம் ஜெபத்தின் வாஞ்சையாக அவர் வருகையை எதிர் நோக்கி புதிய எருசலேமா ய்த் தூய நகரமதாய் நாம் இணைந்திடுவோம் அவரில் - நவ
3. புவி மீதினில் சரீர மீட்பு என்று வருமென காத்திருக்கும் நாம் மகிழ்ந்திடவே அவர் வந்திடுவார் மணவாட்டியாய் மாறிடுவோம் - நவ
4. ஜீவ ஒளி வீசும் கற்கள் சீயோன் கிரி தனிலே சேர்க்கை அருள் சுரந்திருந்தார் நாமம் வரைந்திருந்தார் அவர் மகிமையில் ஆர்ப்பரிப்போம் - நவ
5. தேவ தூதர் எக்காள முடன் ஆரவாரத் தொனி கேட்க அவர் கிருபையினால் மருரூபமாக நம்மைத் தம்முடன் சேர்த்திடுவார் - நவ