நசரேயனே என் இயேசையா
nasareyanae en iyesaiyaa
நசரேயனே என் இயேசையா என்றும் உம் நாமம் பாடி தேவாதி தேவன்நீரே என்று குரல் உயர்த்திஉம் புகழை நான் பாடுவேன்
வானாதி வானங்களை உம் கரத்தினால் அளந்தீரல்லோ வெறுமையிலே பூலோகத்தை நிலை நிறுத்தச் செய்தீரே என் இயேசையா
உமக்கே ஸ்தோத்திரம்
ஆகாய சமுத்திரத்தின் எல்லையை நீரே குறித்தீரல்லோ தண்ணீருக்குள் நான் கடந்திட்டாலும் புரளாமல் காத்தீரே என் இயேசையா
சீயோனின் சிகரமது உம் சிங்காசனம் ஆனதே சீயோனிலே உம்மைக் கண்டிடவே ஆசையாய் துடிக்கிறேன் என் இயேசையா