நன்னாள் இதிலே
nannaal idhilae
நன்னாள் இதிலே ஆசி கூற வாரும் தேவனே வருடங்கள் காலங்கள் கழிந்தாலும் வழுவாமல் காத்த பரிசுத்தரே
1. கைகளின் பலனை சாப்பிடுவார் பாக்கியமும் நன்மையும் உண்டாயிருக்கும் உன் பிள்ளைகள் உன்னைச் சுற்றிலிருந்து ஒலிவமரக் கன்றுகளை போலிருப்பார்கள்
2. நித்திய ஜீவனை அளியும் தேவா நித்தமும் உம்மை ஆராதிக்க உம் செட்டைகள் மறைவில் குஞ்சுகளை போல எந்நாளும் பாதுகாத்திடுவீரே