நன்மையாம் ஈவு ஒன்றை
nanmaiyaam eevu ondrai
நன்மையாம் ஈவு ஒன்றை நியமித்தாரே எந்தனுக்காய் விசேஷித்த மேன்மை ஒன்றை தேவன் நமக்கென்று முன்குறித்தார்
மனிதன் கைகளால் கட்டியவை மண்ணில் மறைந்துமே போகின்றதே தேவகரங்களால் உண்டானவை (2) தூய சீயோன் என் வாஞ்சையதே
இதோ உலகத்தின் முடிவு வரை இருப்பேன் என்னோடு என்கின்றவர் இந்த வாழ்க்கையின் பின்னாலுமே (2) இயேசு என்னோடு வாழ்ந்திடுவார்
பூமிமேலே நாம் அந்நியர்கள் பரதேசிகள் என்று சொல்லி அறிக்கையிட்டு நாம் ஜீவித்துமே (2) அந்த நகரத்தை சுதந்தரிப்போம்
இனி வரப்போகும் மகிமையின் முன் இந்த பூமியின் உபத்திரவம் இணை சொல்லவும் முடியாததால் (2) நானும் அவரோடு ஆண்டிடுவேன்