நன்மைகள் செய்து நலிந்துபோன
nanmaigal seydhu nalindhubona
நன்மைகள் செய்து நலிந்துபோன நண்பனே!… (மகனே!.. மகளே!..) நன்மையின் நாயகர் இயேசு உன்னை மிக நேசிக்கிறார் – (2) நீ சோர்ந்துவிடாதே – மனம் தளர்ந்து போகாதே -2
1. நேசித்தவர் உனக்கெதிராய் பேசினரோ…. நன்மைபெற்றவர் உந்தன் முதுகில் குத்தினரோ..(2) பெற்ற பிள்ளைகள் உன்னை வெறுத்துத் தள்ளினரோ (2)-நீ வளர்த்துவிட்டவர் உந்தன் மார்பில் பாய்ந்தனரோ- நீ உனைக்காட்டிலும் மிக அதிகப்பாடுகள் -2
அனுபவித்தவர் இயேசு என்பதை மறவாதே.. – நிந்தைகளை அனுபவித்தவர் இயேசு என்பதை மறவாதே… – அவமானம் அனுபவித்தவர் இயேசு என்பதை மறவாதே… – துரோகங்கள் அனுபவித்தவர் இயேசு என்பதை மறவாதே…
2. ஊழியத்தின் பாதையிலே வேதனையோ… சுமந்திட முடியாத பாரங்களோ… (2) கண்ணீரும் இரத்தமாகிப் போனதுவோ…. – உன் ஏன் மறந்தீர் என்றுக் கதறும் சூழ்நிலையோ – தேவா உனைக்காட்டிலும் மிக அதிகப்பாடுகள் – 2
அனுபவித்தவர் இயேசு என்பதை மறவாதே… – வேதனை அனுபவித்தவர் இயேசு என்பதை மறவாதே… – சோதனை அனுபவித்தவர் இயேசு என்பதை மறவாதே… – கண்ணீரை அனுபவித்தவர் இயேசு என்பதை மறவாதே