நன்மைகள் காணச் செய்வீர்
nanmaigal kaanas seyveer
நன்மைகள் காணச் செய்வீர் தேவா நன்மை நன்மை ஏராளம் தாராளம் நன்மை நன்மை வரும்போது சந்தோஷமே துக்கம் நீங்கும்போது ஆனந்தமே
1.ஆடுகள் மேய்த்து வந்த தாவீதுக்கும் சிங்காசனம் கொடுத்து உயர்த்தி வைத்தீர்
2.பிள்ளை இல்லாது இருந்த அன்னாளுக்கும் சாமுவேலை தந்து நீர் மகிழ செய்தீர்
3.பாவத்தில் வாழ்ந்து வந்த சகேயுவுக்கும் இரட்சிப்பின் வாழ்வு தந்து மகனாக்கினீர்
4.எதிர்காலம் இல்லாத யோசேப்புக்கும் சிறைவாழ்வை மாற்றி உயரச் செய்தீர்