நன்மை செய்யும் நாயகரே
nanmai seyyum naayagarae
நன்மை செய்யும் நாயகரே பார் போற்றும் தூயவரே-2 எனக்காக நிற்பவரே எப்போதும் இருப்பவரே-2
நன்றி என்ற ஓர் வார்த்தை உமக்கது போதுமோ? -2 உம் பாதம் பணிந்தாலும் நன்றி கடன் தீருமோ? -2
விட்டு விடாமலே விட்டுக் கொடாமலே விழுங்க விழி தேடும் கண்களில் படாமலே-2 கரங்களில் வரைந்தீரே காரியமாய் அழைத்தீரே-2 அழைப்பினை மறப்பேனோ? அறுவடை கொடாமல் மரிப்பேனோ?-2
என் பாவம் நிலுவையிலே என்னைத் தள்ளிடாமலே சுமந்தீர் சிலுவையிலே நிறைந்தீர் மனதினிலே -2 மனிதரன்பு மறந்திடுமே புனிதரன்போ? தொடர்ந்திடுமே -2 நீர் செய்த தியாகங்கள் எழுதுவேன் பல நூறு ஆகமங்கள் -2