நன்மை செய்த தேவனுக்கு
nanmai seydha devanukku
நன்மை செய்த தேவனுக்கு ஆராதனை செய்கிறோம் நன்றி சொல்லி சொல்லி சொல்லி பாடி போற்றுவோம்
கரங்கள் தட்டி பாட்டு பாடி ஒருமனமாய் கூட்டம் கூடி உற்சாகமாய் ஆட்டம் ஆடி நன்றி சொல்லுவோம்
விழாமல் காத்தாரே நிற்கும்படி செய்தாரே பாவத்திற்கு தப்பும்படி வழியை தந்தாரே பெலனையும் கொடுத்தாரே சுகத்தையும் கொடுத்தாரே அவர்க்காய் வாழும்படி கிருபை தந்தாரே
அபிஷேகம் தந்தாரே அனலையும் கொடுத்தாரே ஆவியில் ஆராதிக்க கிருபை தந்தாரே திறமைகள் கொடுத்தாரே வரங்களை அளித்தாரே ஊழியம் செய்யும்படி அழைப்பை தந்தாரே