நன்மை மூலனே நம் நேய சீலனே
nanmai moolanae nam neya seelanae
1. நன்மை மூலனே - நம் நேய சீலனே மைந்தர் பேரிலிந்த வேளை வந்திறங்குமே.
2. போர் அதிகமாய் மும்மரிக்குதே சோர்வடையா ஆவியை நீர் ஊற்றிக் காத்திடும்
3. ஆத்துமா மிகத் தத்தளிக்குதே காத்து என்னை ஆற்றி இப்போ தேற்றிட வாரும்.
4. துன்பம் வந்தாலோ - துயர மின்றியே இன்பமாய் நிலைத்து நிற்க வந்திறங்குமே.
5. இருளாய்த் தோன்றுதே அருளைத் தாருமே பரத்தின் ஜோதி எனக்குள் வீசக் கிருபை கூருமே.
6. எந்தன் நம்பிக்கை உம்மில் தான் ஐயா! நம்பி என்னை முற்றுமாகத் தத்தம் செய்கிறேன்.