நன்றியுடன் துதிப்பேன் நல்லவரே
nandriyudan thudhippen nallavarae
நன்றியுடன் துதிப்பேன் நல்லவரே உம்மையே நாளெல்லாம் பாடுவேன் என்றுமே - (2)
1. அரணும் கோட்டையுமானீர் எந்தன் வாழ்க்கையில் நங்கூரமானீர் - (2) துயர நேரத்தில் என்னை தேற்றிடும் தேற்றரவாளரானீர் எந்தன் தேற்றரவாளரானீர்
2. வழியும் வெளிச்சமுமானீர் எந்தன் வாழ்க்கையில் ஜீவனாயானீர் - (2) குழியில் இருந்து என்னை மீட்டிட எந்தன் அன்பின் மீட்பரானீர் - (2)
3. ஆதியும் அந்தமுமானீர் எந்தன் வாழ்க்கையில் நிரந்தரமானீர் - (2) உம்மை என்றுமே துதித்திட (எந்தன்) துதிக்குப் பாத்திரரானீர் - (2)
4. மேகஸ்தம்பமானீர் இரவில் அக்கினிஸ்தம்பமாயானீர் - (2) நீர் என்னோடு என்றும் இருப்பதால் (எந்தன்) இம்மானுவேலரானீர்