நன்றியோடு உம்மை பாடி
nandriyodu ummai paadi
நன்றியோடு உம்மை பாடி நாள்தோறும் போற்றுவேன் தாழ்வில் இருந்த என்னை தூக்கி கரம் பிடித்து வாழ வழி செய்தீரே-2
1.பெயர் சொல்லி என்னை அழைத்தீர் பெரிய ஜாதியாக மாற்றினீர்-2 போதித்து வழி நடத்தி பிள்ளைகள பெருகச் செய்தீர் உம் புகழ் சொல்லிடுவேன்-2-நன்றியோடு
2.தாயைப் போல் என்னை காத்தீர் தந்தையைப் போல் என்னை நடத்திட்டீர்-2 எத்தனை நாவுகளால் உம் புகழ் பாடினாலும் உம் கிருபைக் கீடாகுமா-2-நன்றியோடு
3.பயத்தை என்னினின்று நீக்கி தைரிய சாலியாக மாற்றினீர்-2 பாதையை பாது காத்தீர் உம் புகழ் பாட செய்தீர் எப்படி நன்றி சொல்வேன்-2-நன்றியோடு