நன்றியால் பொங்குதே எமதுள்ளம்
nandriyaal pongudhae emadhullam
நன்றியால் பொங்குதே எமதுள்ளம் நாதன் செய் பல நன்மைகட்காய் } 2 நாள் தோறும் நலமுடன் காத்தனரே நன்றியால் தோத்தரிப்போம் -- அல்லேலூயா நன்றியால் தோத்தரிப்போம் -- நன்றியால்
1. கடந்த வாழ்நாளில் கருத்துடனே கண்மணி போல் நம்மை காத்தனரே } 2 கண்ணீர் கவலைகளை மாற்றினாரே கணிவுடன் தோத்தரிப்போம் - அல்லேலூயா கணிவுடன் தோத்தரிப்போம்
2. ஜீவன் சுகம் பெலன் யாவும் தந்து ஜீவிய பாதையில் நடத்தினாரே } 2 ஜீவ காலம் எல்லாம் தோத்தரிப்போம் ஜீவனின் அதிபதியை - அல்லேலூயா ஜீவனின் அதிபதியை
3. அற்புத கரம் கொண்டு நடத்தினாரே அதிசயங்கள் பல புரிந்தனரே } 2 ஆயிரம் நாவுகள் தான் போதுமோ ஆண்டவரை போற்ற - அல்லேலூயா ஆண்டவரை போற்ற
4. பாவ சேற்றினில் அமிழ்ந்த நம்மை பாசக்கரம் கொண்டு தூக்கினாரே} 2 கன்மலை மேல் நம்மை நிறுத்தியவர் கருத்துடன் காத்தனரே - அல்லேலூயா கருத்துடன் காத்தனரே