நன்றியால் நிறைந்து
nandriyaal niraindhu
நன்றியால் நிறைந்து நான் உம்மை என்றும் புகழ்ந்திடுவேன் என் தேவா....
நன்றியால் நிறைந்து நான் உம்மை என்றும் புகழ்ந்திடுவேன் உம் கிருபை என்றும் புதிதல்லோ உம் தயவு நீண்ட ஆயுளன்றோ உம் தயவு(2)
உம் பாதம் சேர்வேன் நித்தமும்... உம் செவி கேட்கும் என் ஏங்கலை (2)
உம் பாதம் உருகும் ஏழைக்காய்... உம் புயம் என்னை இரட்சிக்கும் ...என் தேவா
பொன்(உம்) சத்ய வசனம் என் தியானம்... உம் நித்ய வாக்குகள் என் செல்வம்...(2)
உம் திவ்ய கற்பனை என் மாற்றம்... உம் வாயின் ஒலிகள் என் இன்பம்... என் தேவா
உம் தூய ஆவியால் தேற்றிடுவீர்... உம் அபிஷேகத்தால் திடன் தருவீர்...(2)
உம் அன்பு என்னில் பொங்கிடும்.... உம் பெலன் என்னை தாங்கிடும்... என் தேவா