நன்றியால் நம் உள்ளமே
nandriyaal nam ullamae
1. நன்றியால் நம் உள்ளமே நிறைந்த பாடிடுவோம் எண்ணிலடங்கா நன்மைகட்க்காய் நாதனை போற்றிடுவோம்
அல்லேலூயா கீதம் பாடிடுவோம் தற்பரன் இயேசுவையே ஆர்ப்பரித்து நாம் மகிழ்வோம் அற்புத தேவனையே
2. கடந்து நாட்களிலே கருத்தாய் காத்தனரே காப்பார் உன்னை கண்மணிபோல் என்றதாம் வாக்குரைத்தே
3. மாராவைப் போன்ற கசந்ததாம் கோரங்களில் நடுவே தேனிலும் இனிய வாக்குகளால் தேற்றினார் நம் தேவனே
4. சேர்ந்திடும் நேரம் தாங்கிடும் உம் வல்லமையின் கரமே செட்டைகளின் நிழல்களிலே மறைந்து நாம் ஜீவிப்போம்
5. யோர்தானை போன்ற துன்பங்களை தாங்கினேன் உம் பெலத்தால் நமக்கெதிராய் ஒராயுதம் என்றென்றும் வாய்த்திடாதே
6. காடான பாதை நான் செல்கையில் கலங்கரை விளக்காய் இம்மானுவேல் நம்மோடிருந்தால் என்றென்றும் காத்திடுவார்