நன்றிகள் பலகூறி நாம் பாடுவோம்
nandrigal palagoori naam paaduvom
நன்றிகள் பலகூறி நாம் பாடுவோம் நாளும் நமைக் காக்கும் இறை இயேசுவை ( 2 ) அல்லும் பகலிலும் செல்லும் இடமெங்கும் - அன்னையாய் தந்தையாய் அருகில் இருந்து அணைக்கும் தேவனை
கோடி துன்பம் கொடிய நோயில் வீழ்ந்த போதும் தேடிவந்து நம்மைக் காத்திட்டார் ( 2 ) வாடிய மலரைப் போல் வதங்கியே வீழ்ந்தாலும் அன்னையாய
உலகம் நம்மை வெறுத்த போதும் கலகம் நம்மைச் சூழ்ந்த போதும் விலகவில்லை அன்பர் இயேசுவே ( 2 ) நிலைகள் குலைந்ததும் அலையாய் எழுகின்றார் அன்னையாய