நன்றி சொல்லியே இயேசுவை
nandri solliyae yesuvai
நன்றி சொல்லியே இயேசுவைப் பாடுவோம் நன்மைகள் செய்தாரே -ஏராளம் கிருபை பொழிந்தாரே
துரோகி என்னையே தூக்கியெடுத்து தேற்றி அணைத்தாரே
1. பாவி என்னையே பாரில் கண்டீரே தேடியே வந்தீரே - கல்வாரியில் அன்பினால் இழுத்தீரே (2) நன்றியால் பாடிடுவேன்
2.தனித்த என்னையே அணைத்துக் கொண்டீரே உம்மோடு இணைத்தீரே - பேரன்பினால் ஆனந்தம் தந்தீரே (2) நன்றியால் பாடிடுவேன்
3. தாழ்ந்த என்னையே தாங்கி வந்தீரே ஆவியால் நிறைந்தீரே - கிருபையால் வரங்கள் ஈந்திரே (2) நன்றியால் பாடிடுவென்
4.வியாதி வறுமை வேதனை துன்பமே நீக்கிக் காத்தீரே - எப்போதுமே என்னுடன் இருந்தீரே (2) நன்றியால் பாடிடுவேன்
5.வஞ்சக உலகில் நண்பனாய் வந்து நேசத்தைத் தந்தீரே - எந்நாளுமே மாறாமல் இருந்தீரே (2) நன்றியால் பாடிடுவேன்