நன்றி சொல்லி சொல்லி
nandri solli solli
நன்றி சொல்லி சொல்லி பாடுகிறேன் இயேசு ராஜானே நன்மை செய்த உம்மை பாடுகிறேன் தேடும் நேசரே (2)
மனம் தேம்பி தேம்பி தேடுதே உண்மை அன்பையே அதை மீண்டும் மீண்டும் காணாவே உந்தன் அனைப்பிலே - ( நன்றி )
1. தேடினேன் வாடினேன் அன்பிற்காக ஏங்கினேன் தாகமாய் ஒடினேன் கானல் நீராய் போனதே பாசமாய் நேசமாய் என்னை தேடும் மேய்ப்பனாய் தேடியே தேடியே என்னை கண்ட நேசமே நேச இயேசுவே உமதன்பைப்போலவே தாகம் தீர்க்குமா இந்த மாய உலகமே - ( நன்றி )
2. ஆறுதல் வேண்டியே உறவுக்காக நாடினேன் ஆசையாய் தேடினேன் யாவும் மாறிப்போனதே பாசமாய் தோன்றிய வாழ்வும் சாயம் போனதே வாழ்வதும் ஏன் என்று தூன்டும் உணர்வு வாட்டுதே பாரம் தாங்கியே புது வாழ்வை காட்டினீர் வேத நாயகா உம் பாதம் சரணமே - ( நன்றி )