நன்றி சொல்லி பாடுவேன்
nandri solli paaduven
நன்றி சொல்லி பாடுவேன் நன்றி நன்றி ராஜா உம் அன்பை நினைத்து பாடுவேன் நன்றி நன்றி ராஜா - 2
பாடுவேன் நீர் செய்த நன்மையை துதிப்பேன் உம் உயர்ந்த நாமத்தை - 2
கருவினில் தெரிந்தவர் நீரே என்னை கரங்களில் வரைந்தவர் நீரே - 2 தூதரால் என்னை பாதுகாத்தீரே பாதம் இடராமல் என்னை சுமந்தீரே - 2
அவையங்கள் அமைத்தவர் நீரே உந்தன் சுவாசத்தால் உருவாக்கினீரே - 2 உறவுகள் இருந்தாலும் நிழலாய் மாற்றினீரே நிழலாய் அவர்க்காக என்றென்றும் வாழ்வேனே - 2