நன்றி பலிகள் செலுத்தியே
nandri paligal seluthiyae
நன்றி பலிகள் செலுத்தியே நான் உன்னதரை போற்றிடுவேன் நன்மை என்றுமே செய்பவரை நாள் எல்லாம் உயர்த்திடுவேன்-2
எந்தன் இராஜாதி இராஜன் அவர் சர்வ லோகத்தை ஆள்கிறவர் எல்லா மகிமைக்கும் மேலானவர் என் வாழ்க்கையின் வெளிச்சம் அவர்-2
1.நாட்கள் எல்லாம் அழகானதால் படைத்தவரே என்றும் துதிப்பேன்-2 ஜீவனுள்ள நாட்களெல்லாம் கிருபை என்னை தொடரும்-2-எந்தன் இராஜாதி
2.என் காலங்கள் பெலன் உள்ளதால் வல்லமையால் நிரப்பினீரே-2 குறைவில்லாத செல்வங்களை என் கையில் கொடுத்துவிட்டீர்-2-எந்தன் இராஜாதி
3.இளைப்படையாமல் எழும்ப செய்தீர் கழுகைப்போல என்னை உயர செய்தீர்-2 தந்தையாக என்னோடிருந்து புதியன எனக்கு செய்தீர்-2-எந்தன் இராஜாதி