நன்றி பலி செலுத்த வந்தோம்
nandri pali selutha vandhom
நன்றி பலி செலுத்த வந்தோம் அய்யா சிரம் தாழ்த்தி வணங்க வந்தோம் செய்த நன்றி சொல்லிட வந்தோம் அய்யா தலை குனிந்து பணிந்து நின்றோம்
உண்மையான உள்ளத்தோடு நன்றி சொல்வோம் உள்ள ஆழத்தில் இருந்து நாம் நினைத்திடுவோம் உண்மையான உணர்வுடன் நன்றி சொல்வோம்-அதை உண்மை தெய்வம் உமக்கே நாம் சொல்லிட வந்தோம்-நன்றி பலி
1.வானம் பூமி எல்லாம் உங்க படைப்பல்லவா அதில் வைத்ததெல்லாம் நீங்க எனக்கு தந்ததல்லவா-2 ஆறாம் நாளில் நானும் உங்க பிள்ளை அல்லவா இந்த மண்ணினாலே என்னை நீங்க பெற்றீர் அல்லவா
உங்க சாயலாக என்னை நீங்க வைத்தீர் அல்லவா உங்க மூச்சு காற்றே என்னில் ஓடும் சுவாசம் அல்லவா-அய்யா நன்றி பலி
2.உம்மை போல நல்ல தெய்வம் கிடைத்திடுமா அய்யா உம்மை போல நல்ல அப்பா கிடைத்திடுமா-2 உங்க செல்ல பிள்ளை என்று என்னை சொன்னீரல்லவா உங்க உள்ளங்கையில் என்னை நீரும் வரைந்தீரல்லவா
என் உள்ளந்திரியம் எல்லாம் நீரும் அறிந்தீரல்லவா எந்தனுக்காய் உந்தன் ஜீவன் தந்தீரல்லவா-அய்யா நன்றி பலி
3.நீங்க செய்த நன்மைகளை இன்னும் சொல்லவா நீங்க செய்ய போகும் நன்மைகளும் குறைந்திடுமா -2 உங்க அன்பை சொல்லி கொள்ள நாட்கள் போதுமா உங்க அன்பை சொல்லி கொள்ள ஆயுள் போதுமா
என் ஆயுள் வரை நீங்க எங்க தெய்வம் அல்லவா இரண்டாம் மரணம் இன்றி உம்மோடு நான் வாழ்வேனல்லவா-அய்யா நன்றி பலி