நன்றி நன்றி நன்றி இயேசுவே
nandri nandri nandri yesuvae
நன்றி நன்றி நன்றி இயேசுவே உமக்கே நன்றி நன்றி நன்றி இயேசுவே -2 ஹாலேலூயா ஹாலேலூயா ஹாலே லூயா... -2
பார்வோனின் சேனைகளை கவிழ்தவரே கானானின் தேசத்திலே சேர்த்தவரே -2 சீனாய் மலை மீது வந்தவரே -2 திருவசனம் எனக்கா தந்தவரே -2
உமக்கே நன்றி நன்றி நன்றி இயேசுவே -2 ஹாலேலூயா ஹாலேலூயா ஹாலே லூயா... -2
எரிகோ மதிலை உடைத்தவரே எரிகின்ற அக்கினிக்குள் வந்தவரே -2 எலியாவை காகம் கொண்டு போஷித்தீரே -2 எங்களையும் போஷித்து நடத்துகிறீர் ஓஹோ -2
தாவீதின் வம்சத்தில் பிறந்தவரே பாவிகளை இரட்சிக்க வந்தவரே -2 சிலுவையிலே எனக்காக மரித்தீரே -2 உம் திரு இரத்தம் எனக்காக சிந்தி நீரே -2