நன்றி நன்றி நன்றி ராஜா
nandri nandri nandri raajaa
நன்றி நன்றி நன்றி ராஜா நன்றி நன்றி நன்றி தேவா --(2) உமக்கு நன்றி சொல்வதை தவிர வேறே மேன்மை என் வாழ்வில் இல்லை --(2)
கண்ணின் மணிபோல் என்னை காத்தீர் காலமெல்லாம் நடத்துகின்றீர் --(2) உமது அன்பால் நித்தம் மகிழ்வேன் உமது தயவால் தினமும் வாழ்வேன்--(2)
ஆபத்தில் என்னோடே இருப்பவர் நீரே கேடகமாய் என்னை காப்பவர் நீரே --(2) உம்மாலே சேனைக்குள் பாய்ந்திடுவேனே உம்மாலே மதிலை தாண்டிடுவேனே--(2)
அன்போடு என்னை அணைக்கின்றீரே ஆறுதலாக தேற்றுகின்றீரே--(2) தகப்பனைப் போல ஆற்றுகின்றீர் தாயைப்போல தேடுகின்றீர்--(2)