நன்றி நன்றி நன்றி என்று
nandri nandri nandri endru
நன்றி நன்றி நன்றி என்று நித்தம் நான் பாடிடுவேன் நித்தம் தேவன் உம்மை எண்ணிலடங்காத நன்மைகள் செய்தீரே என்றும் துதிப்பேன் -உம்மை என்றும் துதிப்பேன்-நன்றி
பாழான நிலமாய் நான் இருந்தேன் பயிர் நிலமாக மாற்றினீர் பண்படுத்தி பாதுகாத்து காவல் செய்தீரே தண்ணீர் பாய்ச்சி இரப்பாகலாய் காத்துக்கொண்டீரே-நன்றி
பாவத்தின் சேற்றில் நான் கிடந்தேன் பரிசுத்தமாக மாற்றினீரே பாவியாக இருக்கையில் அன்பு வைத்திரே இ்ரத்தம் சிந்தி ஜீவன் தந்து மீட்டுககொண்டீரே-நன்றி
அந்தகாரமாய் நான் இருந்தேன் உமக்குள் வெளிச்சமாய் மாற்றினீரே வெளிச்சத்தின் பிள்ளையாய் நடந்துகொண்டு உம் சித்தத்தை செய்திட கிருபை தந்தீரீ -நன்றி