நன்றி இயேசையா உமக்கு
nandri iyesaiyaa umakku
நன்றி இயேசையா உமக்கு நன்றி இயேசையா
1. தாயின் கருவில் தெரிந்தவரே நன்றி. தாங்கி ஏந்தி சுமப்பவரே நன்றி.
2. இருள் ஒளியாய் மாற்றினீரே நன்றி... அருளை தினமும் தந்தீரே நன்றி...
3. கண்மணி போல் காப்பவரே நன்றி கண்ணீரெல்லாம் துடைத்தவர் நன்றி...
4. குடும்ப வாழ்வு தந்தீரே நன்றி... குறைவை நிறைவாய் மாற்றினாரே நன்றி...
5. அன்பால் இதயம் நிறைத்தீரே நன்றி... ஆவியில் அனல் தந்தீரே நன்றி...
6. தூய வாழ்வு தந்தீரே நன்றி... துதியில் ஜெயத்தை தந்தீரே நன்றி...
7. சத்திய பாதை காட்டினீரே நன்றி. நித்திய ஜீவன் தந்தீரே நன்றி...
8. பழைய குணத்தை மாற்றினீரே நன்றி.. பரலோக வாழ்வு தந்தீரே நன்றி...
9. ஊழியம் செய்ய அழைத்தீரே நன்றி . கூடவே இருந்து நடத்துகிறீர் நன்றி...