நண்பனாய் மாறனும்
nanbanaay maaranum
நண்பனாய் மாறனும் சிநேகிதனாய் உம்மோடு வாழனும் உம் வார்த்தையிலே நான் வளரனும் உம் உறவினிலே என்றும் மகிழனும்
இயேசுவே என் நேசரே இயேசுவே என் மீட்பரே-2
உம்மோடு அதிகாலை துவங்கணும் உம் இன்ப சத்தம் கேட்கணும் -2 சிநேகிதன் போல் ஜாமம் வரை உம்மோடு மனம் திறந்து பேசணும்
உம் வழிகள் என்வழியாய் மாறணும் உம் ஒளியின் சுடர்என்னில் வீசணும் -2 உம் கரங்கள் நான் பிடித்து உயிர்வாழும் காலமெல்லாம் நடக்கணும்
3 . உள்ளத்தை நேசிக்கும் நண்பரே என் உள்ளத்தில் உள்ளதை சொல்கிறேன் -2 ஜீவனோ மரணமோ நான் ஒருபோதும் உம்மை விட்டுப் பிரிந்திடேன்
உம் இதயத் துடிப்பை நான் அறியனும் உம் விருப்பங்கள் யாவும் புரியணும் -2 உம் இதயம் எனில் மகிழ உம் நாமமகிமைக்காக வாழணும்