நம்முடைய தெய்வத்தை போல்
nammudaiya theyvathai pol
நம்முடைய தெய்வத்தை போல் பெரிய தெய்வம் யாருண்டு
நாம் பாடுவோம் புது கீதம் மா அற்புதம் அவர் செய்தார் தம் வலக்கரமே சுத்த பூஜமே ஜெயமே பெற்றோங்கும்
பூவது மாறிடினும் மலை ஆழியில் விழுந்திடினும் ஆழங்கள் பொங்கிடினும் பயமில்லை நமக்கென்றும்
யெகோவாவின் திருநாமம் பெலனாகிய கோபுரமே பயமடைந்தோன் கோட்டை அதில் ஓடி அடைந்திடுவோம்
கர்த்தரின் திரு கண்கள் பூவெங்கும் உலாவிடுதே தம் உத்தம பக்தருக்காய் பலம் அகிலமும் வெளிப்படுத்த
மாற்றமில்லா மலையாம் யெகோவாவே நமக்குண்டு சார்ந்திடுவீர் அவரில் ஆறுதலின் நாயகரே