நம்பினவர்க்கருள்
nambinavarkkarul
நம்பினவர்க்கருள் இன்பம் தரும் இயேசு தேவா எழில் மூவா எளியோரைக் காவா - நம்பினவர்க்கருள்
நாதனே மலர்ப்பாதனே சத்ய வேதனே இயேசு தேவா எழில் மூவா எளியோரைக் காவா _ நம்பினவர்க்கருள்
மாசில்லாத தேவதூதர்கள் அருளிய மாமகத்துவக் காட்சியே மாதொழுவிலே நீ கந்தை பொதிந்தது விந்தையே வெகு மாட்சியே
வானில் ஆபிராம் வாழ்த்தியே உன்னைப் போற்றியே பாடும் கீதம் சங்கீதம் வெகு இங்கிதம் - நம்பினவர்க்கருள்