நம்பிக்கை தளராத நம்பிக்கையே
nambikkai thalaraadha nambikkaiyae
நம்பிக்கை தளராத நம்பிக்கையே நாதன் தாள் பணிகின்ற நம்பிக்கையே நன்மைகள் கைகூடும் நம்பிக்கையே நெஞ்சங்கள் மிக மகிழும் இறை நம்பிக்கை இயேசுவே என் இயேசுவே - 4
தட்டுங்கள் திறக்கும் தடை முற்றும் அகலும் கேளுங்கள் கிடைக்கும் குறையாவும் மறையும் தேடுங்கள் தெரியும் பெரும் திகைப்பு புரியும் நெஞ்சங்கள் மிக மகிழும் . . .
கடல் நீரும் காயும் கால் நடந்து போகும் மலை கூட நகரும் சிகரங்கள் வணங்கும் அழிக்காது நதியும் எரிக்காது நெருப்பும் நெஞ்சங்கள் மிக மகிழும் . . .