நம்பிடு நம்பிடு இயேசுவை
nambidu nambidu yesuvai
நம்பிடு நம்பிடு இயேசுவை நம்பிடு உன் துக்கம் நீங்கிடுமே வந்திடு வந்திடு இயேசுவிடம் வந்திடு உன் வாழ்வை மாற்றிடுவார் உன் கவலைகள் தீர்த்திடுவார் உன் கண்ணீரைத் துடைத்திடுவார்
இயேசு என்னும் நாமத்திலே விடுதலை விடுதலையே இயேசு என்னும் நாமம் சொல்ல பேய்கள் நடுங்கிடுதே – நம்பிடு
பாவமெல்லாம் போக்கிடுவார் இயேசுவின் இரத்தத்தாலே சாபமெல்லாம் நீக்கிடுவார் சிலுவை மரணத்தாலே – நம்பிடு
பாவமில்லை மரணமில்லை இயேசு ஜெயமெடுத்தார் பயமுமில்லை திகிலுமில்லை இயேசு உயிர்த்தெழுந்தார் – நம்பிடு
பரிசுத்த ஆவியைத் தந்திடுவார் வல்லமை பெற்றிடவே பரிசுத்த ஜீவியம் செய்திடுவோம் சாட்சியாய் வாழ்ந்திடுவோம் – நம்பிடு
எக்காள சத்தம் கேட்டிடவே இயேசு வந்திடுவார் ஆயத்தமாக காத்திருப்போம் பரலோகம் சென்றிடவே – நம்பிடு