நம்பி வந்தேன் திருவடியே
nambi vandhen thiruvadiyae
நம்பி வந்தேன் திருவடியே சரணம் நான் மீதினிலே இயேசு ராஜனின் நாமத்தில்
1. பாசமாய் ஜீவனைக் கொடுத்து - கோரப் பாவத்திலிருந்தும் விடுத்து காசினி மீதில் நேசமதில் காத்து வருகின்ற கர்த்தாதி கர்த்தா - நம்பி
2. தூரத்திலிருந்தெமை யழைத்து - பரன் தூய்மையின் சாயலையணிய தொங்கினார் கல்வாரி மூன்றாணி மீதினில் தூதருக்கில்லாத மேன்மையை யளித்தி - நம்பி
3. நம்பினோரை காக்கும் தேவன் - பகல் இரவு கண்ணுறங்கிடா மூவி நாடிடுவோமே, நன்மையைப் பெறவே நல்லவரென்றென்றும் ஜீவிப்பதாலே - நம்பி
4. வாடாத ஜீவகிரீடம் - பரண் மகிமையும், நீதியின் முடியும் சூடிடுவாரே சித்தர்கள் சேர்ந்து பாடிடுவாரே பரன் துதியென்றும் - நம்பி
5. கைவேலையல்லாத மனையில் - நிதம் வாழ்வோம் சேர்ந்ததிங்கு விரைவில் ஆளுவோம் நாம் அன்பரோடென்றும் அகமகிழ்ந்தே யுகாயுகமென்றும் - நம்பி