நம்ப வேண்டாம் நம்ப வேண்டாம்
namba vendaam namba vendaam
1. நம்ப வேண்டாம் நம்ப வேண்டாம் இந்தப் பொய்யுலகை நம்ப வேண்டாம். நேசங் காட்டி த்ரோகம் செய்யும் - இந்த பாழுலகை நம்ப வேண்டாம்.
2. உன்னைப் பெற்ற மாதா எங்கே? போஷித்த உன் தந்தை எங்கே? போய் விட்டாரோ போய் விட்டாரோ? உன்னை விட்டுப் போய் விட்டாரோ?
3. அண்ணன் எங்கே தம்பி எங்கே? அக்காள் எங்கே தங்கை எங்கே? ஆசையாகத் தேடி வைத்த ஆஸ்தி செல்வம் தானுமெங்கே?
4. திருடனைப் போல் சாவு வரும் திடுக்கிடுவாய் நீயுமப்போ பாம்பின் வாயில் தவளை போல பரிதபிப்பாய் பரிதபிப்பாய்.
5. பிரேதமாகப் பாவி யுன்னைத் தூக்கிப் போவார் கல்லறைக்கு அங்கே உன்னைப் புதைத்திடுவார் நம்புவாயோ உலகைப் பின்னும்?
6. யேசு நாதர் பாதம் தேடும் மீட்பை இன்றே பெற்றுக் கொள்ளும் குருசில் தொங்கும் நேசர் பாரும் குணமாக்குவார் இப்போ வாரும்.