நமக்கொரு பாலகன் பிறந்தாரே
namakkoru paalagan pirandhaarae
நமக்கொரு பாலகன் பிறந்தாரே நமக்கொரு குமாரன் கொடுக்கப்பட்டார்-2 கர்த்தர்த்துவம் அவர் தோளின் மேலே அவரின் நாமம் அதிசயமே-2
பல்லவி
அதிசய பாலனாய் இன்று பிறந்தார் அதிசயம் இது அதிசயம்-2-நமக்கொரு
1.இருளை அகற்றும் ஒளியாக இறைமகன் இயேசு பிறந்தாரே வழியை நமக்கு காட்டிடவே பேரொளியாய் அவர் உதித்தாரே இடையர்கள் அங்கு பார்த்தனரே ஞானிகள் மூவர் வணங்கினரே-2
அதிசய பாலனாய் இன்று பிறந்தார் அதிசயம் இது அதிசயம்-2
2.வானமும் பூமியும் படைத்தவர் உயிருள்ள வார்த்தையாய் இருக்கிறார் உலகத்தின் பாவத்தை சுமக்கவே உன்னதராய் மண்ணில் பிறந்தாரே உலகில் பிறந்தது சமாதானம் உன்னதத்தின் தேவனுக்கு மகிமையே-2
பல்லவி
அதிசய பாலனாய் இன்று பிறந்தார் அதிசயம் இது அதிசயம்-2-நமக்கொரு